கார்கி போரில் இந்திய வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக கார்கி வெற்றி தினம் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகின்றனர்.
காஷ்மீர் மாநிலத்திற்கு சொந்தமான கார்கில் பகுதிக்குள் கடந்த 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நுழைந்துள்ளது.
இதனால்,இந்திய ராணுவத்திற்கும்,பாகிஸ்தான் ராணுவத்திற்கும் இடையே கடும் போர் நடைபெற்றது.
கார்கில் பகுதியில் கடும் பனிப்பொழிவில் நடைபெற்ற இந்த போரில் பாக்கிஸ்தான் அணியை இந்திய ராணுவம் வீழ்த்தி வெற்றி வாகை சூட்டியது.
மேலும், இந்த போரில் இந்திய ராணுவ வீரர்கள் பலர் உயிர் தியாகம் செய்து பாகிஸ்தான் ராணுவத்தை விரட்டி அடித்துள்ளனர்.
இந்த சூழலில் கார்கி போரில் இந்திய வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக கார்கி வெற்றி தினம் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு 25 சில்வர் ஜூப்ளி விழாவில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி கார்கி விழாவில் கலந்து கொண்டு,போரில் வீரமரணம் அடைத்த வீரர்களின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
அதன் பின்னர்,விழாவில் பேசிய பிரதமர் மோடி,”நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த நமது வீரர்களுக்கு நாம் ஒவ்வொருவரும் கடன்பட்டிருக்கிறோம்.
இந்தியா மீதான தாக்குதல்கள் இன்றும் தொடர்கிறது.கடந்த கால தவறுகளில் பாகிஸ்தான் இன்னும் பாடம் கற்கவில்லை.
தீய நோக்கத்துடன் இந்தியாவை அணுகினால் அடக்கி ஒடுக்கப்படுவர்கள். நமது ராணுவ வீரர்கள் முழு அவர்களின் பலத்துடன் பயங்கரவாதத்தை நசுக்குவார்கள்” என பேசியுள்ளார்.