கர்நாடகா அணைகளுக்கு வரும் உபரி நீரை தமிழகத்துக்கு காவிரிக்கு வெளியேற்றப்பட்டுள்ளது.
கார்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள காரணத்தினால் அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய அணைகள் நிரம்பியது.
இதனையடுத்து,அணைகளுக்கு வரும் உபரி நீரை தமிழகத்துக்கு காவிரிக்கு வெளியேற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில்,தமிழகத்திற்கு அதிகபட்சமாக 2 லட்சம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நீர் வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் ஆணை நிரம்பியுள்ளது.
அதை தொடர்ந்து படிபடியாக உபரிநீர் அதிகரித்ததால், அதிகபட்சமாக 1.80 லட்சம் கனஅடி வரை நீர் திறக்கப்பட்டதால்,நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள காவிரி ஆற்றின் கரையோரம் பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது.
இந்த நிலையில் கர்நாடாவில் மழை குறைந்ததால் நீர்வரத்து குறைந்துள்ளது.
இதனையடுத்து,அணைகளுக்கு வரும் நீர்வரத்து நேற்று காலை 26 ஆயிரம் கன அடியாக இருந்துள்ளது.
தற்போது,அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக நீடித்து வருகிறது. அணையின் நீர் இருப்பு 93.47 டிஎம்சி ஆகவும், நீர் வெளியேற்றம் 500 கன அடியாகவும் உள்ளது.