சமுகவைத்தளத்தில் பரவிவரும் இந்த செய்தி வெறும் வதந்தி என அப்துல் ஹமீது அவரது முகநூல் பக்கத்தில் விளக்கம் ஒன்றை அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கமளித்துள்ளார்.
தமிழ் உச்சரிப்பு,தமிழ் பேசுவதில் அழுத்தம் திரிருத்தம் மற்றும் தமிழை தனித்துவம் மிக்க உச்சரிப்புடன் தமிழ் மொழியின் அழகை பேசி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் இலங்கை வானொலி அறிவிப்பாளர் பி. எஸ். அப்துல் ஹமீது.
இவர் தமிழில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஏராளமான பாடல்களை பாடி ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர்.
இந்நிலையில்,பி.எஸ்.அப்துல் ஹமீது பற்றிய செய்தி கடந்த சில காலங்களாக வெளியாகி வந்துள்ளது.
அந்த செய்தியில்,பி.எஸ்.அப்துல் ஹமீது உடல்நலக்குறைவால் உயிரிழந்தாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில்,சமுகவைத்தளத்தில் பரவிவரும் இந்த செய்தி வெறும் வதந்தி என அப்துல் ஹமீது அவரது முகநூல் பக்கத்தில் விளக்கம் ஒன்றை அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ”நான் இலங்கையில் நலமுடன் இருக்கிறேன்.சமூகவலைத்தளங்களில் நான் இறந்ததாக வெளியான செய்தி வாந்தி எனவும்,இந்த செய்தி அறிந்து பலர் என்னை தொடர்பு கொண்டு பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது’‘. என இலங்கை வானொலி அறிவிப்பாளர் பி. எஸ். அப்துல் ஹமீது தெரிவித்துள்ளார்.