புகார்களை விரைந்து விசாரிக்கவும் நீதிமன்ற வழக்குகளை விரைந்து நடத்தவும் இந்த அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 20ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சட்டசபைக் கூட்டத்தொடர் கூடியது முதல் நாளில் இருந்தே கள்ளக்குறிச்சி சம்பவத்தை கண்டித்து அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்து வருகின்றன.
இதனையடுத்து,தமிழக சட்டசபை மீண்டும் இன்று கூடியுள்ளது.
அந்த கூட்டத்தில்,தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937-ல் திருத்தம் செய்து சட்ட மசோதா முன்வடிவை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி சட்டசபையில் தாக்கல் செய்தார்.
அதில்,கள்ளச்சாராயம் தயாரிப்பவர்களுக்கு அவரது வாழ்நாள் முழுவதும் கடுங்காவல் தண்டனையும், ₹10 லட்சம் அபராதம் விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்நிலையில், சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய போது, “சாத்தான்குளம் விவகாரம் போல் திமுக அரசு கள்ளக்குறிச்சி விவகாரத்தை மறைக்கவில்லை.
இந்த விவகாரம் தொடர்பாக 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளது”.
அதைத்தொடர்ந்து பேசிய அவர், ”கோடநாடு வழக்கில் இன்டர்போல் போலீசார் விசாரணைநடைபெற்று வருகிறது.
மேலும், “காவல்துறையில் கடந்த 3 ஆண்டு காலத்தில் 190 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளனர்.
இதில்,கடந்த ஆண்டு மட்டும் காவல் துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் நடைமுறை படுத்தப்பட்டுள்ளனர்.
சிறு குற்றங்கள் செய்யும் குற்றவாளிகளைத் திருத்தி அவர்களை மாற்றுவதற்குப் பறவைத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி,புகார்களை விரைந்து விசாரிக்கவும் நீதிமன்ற வழக்குகளை விரைந்து நடத்தவும் இந்த அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
குற்றங்களின் எண்ணிக்கை குறைப்பது அல்ல… குற்ற எண்ணத்தைக் குறைப்பது தான் காவல்துறையின் பணியாக இருக்க வேண்டும்.
இனி வரும் காலங்களில் குற்றங்களைத் தடுக்க மேலும் கடுமையான நடவடிக்கை இருக்கும் என்பதை உறுதியாகக் கூறுகிறேன்” என முதல்வர் தெரிவித்துள்ளார்.