நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் தங்கலான்.இந்த படத்தை இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கியுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் பிரபலங்களில் சியான் விக்ரம் முக்கியத்துவம் வாய்ந்தவர்.
இந்நிலையில்,நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் தங்கலான்.இந்த படத்தை இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கியுள்ளார்.
தங்கலான் படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி,ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
நடிகர் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தில் விக்ரம் தோற்றத்தையும்,நடிப்பும் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக இருக்கும் என படக்குழுவினர் கூறியுள்ளனர்.
இந்நிலையில் தங்கலான் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளனர்.இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.