இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகின்றனர்,
நேற்று ஜூன் 5ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்த நிலையில் இன்று அதிரடியாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
அதன் படி, இன்று ஜூன் 6ஆம் தேதி 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.6,800-க்கும், சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதை போல் 18 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.61 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.5,570-க்கும் ஒரு சவரனுக்கு ரூ.488 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதை போன்று,வெள்ளி விலையில் எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.96.20-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.96,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.