தமிழகத்தில் ஒரேகட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் எனத் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நடப்பு நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் இன்னும் சில மாதங்களில் ஜூன் 16 தேதியுடன் முடிய உள்ள நிலையில், அதற்கு முன்பாக பதினெட்டாவது மக்களவை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
அதனை, தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 2 தேர்தல் ஆணையர்கள் கூட்டாக தேர்தல் தேதியின் அட்டவணையை இன்று (மார்ச் 16) தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும், தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளதாகவும், கடந்த 2019 ஆம் ஆண்டு போலவே இந்த ஆண்டும் நடைமுறை படுத்தப்படும் என அறிவித்து இருக்கிறது. முதற்கட்டத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதியிலும் அதை தொடர்ந்த, ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதை தொடர்ந்து, முதற்கட்ட தேர்தலின்போதே தமிழகத்தில் காலியாக அறிவிக்கப்பட்டு உள்ள விளவங்கோடு தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. எனவும், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மக்களவை தேர்தல் 2024
. வேட்பு மனு தாக்கல் : மார்ச் 20
. வேட்பு மனு தாக்கல் முடிவு : மார்ச் 27
. வேட்பு மனு பரிசீலனை : மார்ச் 28
. வாக்குப் பதிவு : ஏப்ரல்
. வாக்கு எண்ணிக்கை : ஜூன் 4
. மொத்த தொகுதிகள் : 39