தமிழகத்தில் ஜூன் 10-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் கடைசியில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது.
கோடை விடுமுறை முடிந்து வருகிற 6-ந்தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்து இருந்ததுள்ளது.
இந்த நிலையில், கத்திரி வெயில் முடிவடைந்தாலும், தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறையவில்லை.
இந்நிலையில்,தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெப்பம் 100 டிகிரி செல்சியசை தாண்டி பதிவாகி வருகிறது.
இதன் காரணமாக பகல் நேரங்களில் மக்களால் வெளியே நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் வீட்டுக்குள் மக்கள் முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதியில் பள்ளிகளை திறந்தால் வெயிலின் தாக்கத்தால் மாணவர்கள் கடுமையான பாதிப்புகளை சந்திப்பார்கள் என்பதால்,பள்ளிகள் திறப்பு தேதியை தள்ளிவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டது.
இந்த நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில்,தற்போது கோடை விடுமுறையை நீட்டித்து ஜூன் 10-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.