பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 3 வெண்கல பதக்கங்களைபெற்று 57 வது இடத்தில் உள்ளது.
பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் சர்வதேச ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது.இந்த போட்டிகளில் உலக நாடுகளில் இருந்து பல்வேறு வீராங்கனைகள் கலந்துகொண்டு தங்களது பதக்கங்களை கைப்பற்றி வருகின்றனர்.
அந்த வகையில்,பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் 9 வது நாள் போட்டி விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில்,அன்றய நாள் முடிவில் சீனாவை பின்னுக்கு தள்ளி அமெரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது.
அந்த வகையில்,முதலிடம் பிடித்துள்ள அமெரிக்கா 19 தங்கம், 26 வெள்ளி, 26 வெண்கலம் என மொத்தம் 71 பதக்கங்களை வாரிக்குவித்துள்ளது.
அதை தொடர்ந்து,19 தங்கம், 15 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 45 பதக்கங்களுடன் சீனா இரண்டாம் இடத்தில் உள்ளது.
அதன்படி,பிரான்ஸ் 12 தங்கம், 14 வெள்ளி, 18 வெண்கலம் என 44 பதக்கங்கள் பெற்று மூன்றாவது இடத்திலும், ஆஸ்திரேலியா 12 தங்கம், 11 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 31 பதக்கங்களை பெற்று நான்காவது இடத்திலும் உள்ளது.
மேலும்,ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 3 வெண்கல பதக்கங்களை வென்று 57 வது இடத்தில் உள்ளது.