காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் எனவும் மீனவர்கள் ஆலோசனை பொதுக்கூட்டத்தில் தீர்மானித்துள்ளனர் என தெரிவித்துள்ளனர்.
நாளுக்கு நாள் இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்கள் அதிகரித்து கொண்டே வருகின்றனர்.
இந்த நிலையில்,நேற்று மீன் பிடிப்பதற்க்காக கடலுக்கு சென்ற மீனவர்கள் சென்றுள்ளனர்.
அப்போது,அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் விசைப்படகில் மோதி உள்ளனர்.
இதனால்,விசைப்படகு கவிழ்ந்து படகில் இருந்த 4 மீனவர்களில் 2 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
மேலும் மீதம் உள்ள இருவரின் ஒருவரான மலைச்சாமி படகு மோதிய அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளார்.மற்றொருவரான ராமச்சந்திரன் கடலில் மாயமாகியுள்ளார்.
அவரை தேடும் பணியில் தற்போது இந்திய கடற்படையினர் தீவிரம் காட்டி தேடி வருகின்றனர்.
இந்த நிலையில்,இலங்கை கடற்படை கப்பல் மோதி உயிரிழந்த மலைச்சாமியின் உடலை தமிழகம் கொண்டுவரும் வரையும்,இலங்கை கடற்படையால் கைது செயப்பட்டுள்ள இருவரை விடுவிக்கவும்,தமிழக மீனவர்களை தொடர்ந்து கைது செய்து அத்துமீறலில் ஈடுபடும் இலங்கை கடற்படையை கண்டித்தும் போராட்டம் நடத்தப்பட்ட உள்ளனர்.
மேலும், இந்த போராட்டம் கைது செய்யப்பட்ட இருவர் மீதும் எந்த ஒரு வழக்குப்பதிவுயின்றி விடுவிக்க வேண்டும் எனவும்,அவர்கள் தமிழ்நாடு திரும்பும் வரை இந்த காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் எனவும் மீனவர்கள் ஆலோசனை பொதுக்கூட்டத்தில் தீர்மானித்துள்ளனர் என தெரிவித்துள்ளனர்.இதனால் ராமேஸ்வரம் மீனவக்குடும்பங்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளனர்.