அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவரை தாக்கியதால் மருத்துவர்கள் பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரியில் உள்ள பாவாணர் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார். இவருக்கு மகேஷ என்ற ஒரு மகனும் உள்ளார்.இந்நிலையில் மகேஷ் கடந்த 12 தேதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்துள்ளார்.இந்நிலையில்,அருகில் உள்ளவர்கள் மகேஷை மீட்டி புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதை தொடர்ந்து, தனது மகனை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு வினோத்துகுமார் மதுபோதையில் சென்றுள்ளார்.இதனால்,அவரது மனைவி மற்றும் அவரது சகோதரி தட்டிக்கேட்டதற்கு அவர்களை வினோத்துகுமார் தாக்கியுள்ளர்.
அப்போது,பணியில் இருந்த மருத்துவர் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் அவரை அங்கிருந்து வெளியேற்றினர்.இதனால்,ஆத்திரம் அடைந்த வினோத்துகுமார் தான் வைத்திருந்த கத்தியால் மருத்துவர் நவீன் கழுத்தில் எதிர்பாராத நேரத்தில் குத்தியுள்ளார்.இதனால் படுக்காயமடைந்த மருத்துவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தொடர்ந்து,அங்கிருந்த மக்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வினோத்குமாரை பிடித்து புறநகர் பகுதி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.இதை அடுத்து அரசு மருத்துவர்களின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க கோரி சுமார் 1 மணிநேர பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் மருத்துவர்கள் ஈடுபட்டனர்.இதனால் சிகிச்சைக்காக மருத்துவமனை வந்த நோயாளிகள் சிகிக்சை பெறமுடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இந்த சம்பவத்தை குறித்து தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு புறக்கணிப்பு போராட்டத்தில் இருந்த மருத்துவர்களிடம் பேசிச்சுவார்தை நடத்தினர்.
பின்னர், ‘மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்’.இந்நிலையில் மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு பணியை தொடங்கினர்.இதனால் அரசு மருத்துவமனை மருத்துவர்களின் பணிபுறக்கணிப்பு போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.