ரஷியா மற்றும் உக்ரைன் இடையே போர் துவங்கியதில் இருந்து, பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் என இந்தியா தொடர்ந்து கூறி வந்தது.
பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசுவதற்காக வரும் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி உக்ரைன் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மற்றும் ரஷியா ஆகிய இரண்டு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற போருக்கு பிறகு , இந்திய பிரதமர் மோடி முதல் முறையாக உக்கிரனுக்கு செல்கிறார்.
உக்ரைன் மற்றும் ரஷியா ஆகிய இரண்டு நாடுகளுக்கும் நெருங்கிய நட்பு நாடாக இந்தியா இருந்து வருகிறது.
இந்த நிலையில்,பிரதமர் மோடி தற்போது உக்ரைன் பயணம் மேற்கொள்வது தற்போது உலக நாடுகள் மத்தியில் பெரும் கவனம் பெற்றுள்ளது.
இந்த சூழலில், 2 நாள் பயணமாக ரஷியாவுக்கு சென்றிருந்த பிரதமர் மோடி, அதிபர் புதினை சந்தித்து பேசினார்.
அப்போது, அவர் போர் தீர்வு அல்ல!சமரச பேச்சு தான் தீர்வு தரும் என புதினிடம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும்,ரஷியா மற்றும் உக்ரைன் இடையே போர் துவங்கியதில் இருந்து, பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் என இந்தியா தொடர்ந்து கூறி வந்தது.
இந்த நிலையில் தற்போது பிரதமர் மோடி உக்ரைன் பயணம் மேற்கொள்வது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றனர்.