செக் குடியரசு டென்னிஸ் வீராங்கனை மார்க்கெட்டா வோன்ட்ரூசோவா பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டு டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் பதக்கம் வென்றவர் மார்க்கெட்டா வோன்ட்ரூசோவா.
இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டமும் வென்றுள்ளார்.
அதை தொடர்ந்து,பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகி வந்த மார்க்கெட்டா, காயம் காரணமாக பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க போவதில்லை என அறிவித்திருந்தார்.
இந்த நிலையில்,டென்னிஸ் தரவரிசை பட்டியலில் 6ஆம் இடத்தை பிடித்து, எதிர் அணிக்கு ஆட்டம் காட்டி வந்த செக் குடியரசு டென்னிஸ் வீராங்கனை மார்க்கெட்டாவின் திடீர் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.