இராமநாதபுரத்தில் வாக்கு சேகரிப்பின் போது பலாப்பழத்திற்கு வாக்கு கேட்பதற்கு பதிலாக இரட்டை இலைக்கு வாக்களிக்குமாறு கேட்டுள்ளார் ஓ. பன்னிர்செல்வம்.
நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 தேதியில் நடைபெற உள்ள நிலையில், தற்போது அனைத்து கட்சிகள் மற்றும் கூட்டணிக்கட்சிகள் வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக கூட்டணியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் ஓ.பன்னிர்செல்வத்துக்கு இந்த தேர்தலில் பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டது.
ஓ.பன்னிர்செல்வம் தற்போது உள்ள நிலையில் இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்கு இந்த தேர்தலில் வெற்றி பெறுவது அவசியமான ஒன்றாகும்.
இந்நிலையில், பன்னிர்செல்வம் இராமநாதபுரம் தொகுதியில் உள்ள மஞ்சூர் ,போகலூர், துரத்தியேந்தல் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பு பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். ”பரப்புரையில் பேசிய பன்னிர்செல்வம் பலாப்பழ சின்னத்திற்கு பதிலாக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிங்கள் என்று சொல்லிவிட்டு பின்னர், பழக்கதோஷத்தில் சொல்லி விட்டேன் என மழுப்பிவிட்டார்”.
அதை தொடர்ந்து, பேசிய பன்னிர்செல்வம் ”இந்த பகுதியில் உள்ள தண்ணீர் பிரச்சனையை நிரந்தரமாக போக்கி நல்ல நாடாளுமன்ற உறுப்பினராகவும் உங்களில் ஒருவனாகவும் இருப்பேன்” என பரப்புரையில் ஓ.பன்னிர்செல்வம் தெரிவித்துள்ளார்.