காத்மாண்டு விமான நிலையத்தில் இருந்து பயணிகளுடன் சென்ற விமானம் திடீர் விபத்தில் சிக்கியதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளத்தின் சவுர்யா விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று காத்மாண்டு விமான நிலையத்திலிருந்து, பொக்காரா என்ற ரிசார்ட் நகருக்கு 19 பயணிகளுடன் புறப்பட்டது.
விமானம் ரன்வேயில் சென்று கொண்டிருந்த நேரத்தில் பறக்க தொடங்கியது.
அப்போது,திடீரென சறுக்கிய விமானம் விமான நிலையத்தின் அருகில் உள்ள காலி இடத்தில் விழுந்து நொறுங்கியது.
இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.இந்த சுழலில் விமானத்தில் இருந்த 19 நபர்களில் 18 பேர் உயிரிழந்தாக தெரிவித்துள்ளனர்.
இந்த கோரா விபத்தில் சிக்கிய பைலட் மட்டும் பலத்த காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து காரணமாக காத்மாண்டு விமான நிலையம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.
மேலும்,விபத்தை குறித்து தீவிர விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.