கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் சில நாட்களாக பெய்து வரும் அதிக கனமழை மற்றும் வெள்ளத்தால் அந்த பகுதி பகுதியில் வசிக்கும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கென்யாவில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் முழிக்கியுள்ளனர்.இதனால்,சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
மேலும்,விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வை பற்றி கென்யா பேரிடர் குழுவினர் அளித்துள்ள அறிக்கையில் ”மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் எனவும்,வெள்ளத்தில் சிக்கியவர்களில் 110-க்கும் மேற்பட்டோர்களை இதுவரை மீட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.மேலும்,காணாமல் போனவர்களை தேடும் பணிகளில் பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர் எனவும்,வெள்ளத்தில் வீடுகளை இழந்தவர்களை நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளனர்” என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில்,தலைநகரான நைரோபி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து முடங்கியது.
அதுமட்டுமின்றி, கனமழை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்பதால் அந்த பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.