சமீபகாலமாக நமது அண்டை நாடான வங்காளதேசத்தில் இடஓதுக்கீடு விவகாரம் தொடர்பாக மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால்,வங்காளதேசம் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
இந்த போராட்டம் நாளடைவில்,வன்முறையாக மாறியதால் அந்த நாட்டு பிரதமராக பதவி வகித்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டே வெளியேறியுள்ளார்.
இதனால்,வங்காளதேசம் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்,அங்கு இடைக்கால அரசு அமைப்பதற்கான நடவடிக்கையில் அந்நாட்டு ராணுவங்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து,நோபல் பரிசு பெற்ற பிரபல எழுத்தாளரும், கிராமிய வங்கி தொடங்கியவருமான முகமது யூனுஸ் என்ற நிபுணரை இடைக்கால தலைமை ஆலோசராக நியமிக்க வேண்டும் என்று மாணவர் இயக்கங்கள் கோரிக்கைகள் வைத்துள்ளனர்.