வங்கிகள் முந்தய ஆண்டுகளை விட இந்த ஆண்டு 25 சதவிகிதம் அதிகமாக அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2024 நிதியாண்டில் ஒரு தனி நபர் வங்கிக் கணக்குகளில் மாதாந்திர குறைந்த பட்ச வைப்புத் தொகை அதாவது மினிமம் பேலன்ஸ் இருக்கவேண்டும்.
வைப்புத் தொகை இல்லை என்றாள் வங்கிகள் சார்பில் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில்,அப்படி வசூலிக்கப்பட்ட அபராதம் மட்டுமே ரூ. 2,331 கோடி என மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்திரி மக்களவையில் தெரிவித்துள்ளார்.
அதில் அத்திப்பட்சமாக பஞ்சாப் தேசிய வங்கிக் தனது வாடிக்கையாளர்களிடம் இருந்து மொத்தமாக ரூ.633 கோடி வசூலித்துள்ளது.
அதை தொடர்ந்து,பேங் ஆப் பரோடா தனது வாடிக்கையாளர்களிடம் இருந்து மொத்தமாக ரூ.386 கோடியும் வசூலித்துள்ளது.
வங்கிக் கணக்களில் மாதாந்திரமாக மினிமம் பேலன்ஸ் இல்லாத காரணத்தால் இந்த அபராதம் வசூலிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த மினிமம் பேலன்ஸ் தொகை வங்கிக்கு வங்கியும் , அந்தந்த இடத்தை பொறுத்து மாறுபடும்.
இந்த சூழலில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் மொத்தமாக சுமார் ரூ.8,500 கோடிவரை வங்கிகள் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
அதை தொடர்ந்து,முறையான மினிமம் பேலன்ஸ் இல்லாமல் வங்கிக்கணக்குகளில் அடுத்த முறை பரிவர்த்தனை செய்யும் பொழுது அந்த கணக்கிலிருந்து அபாரதத் தொகை பிடித்தம் செய்யப்படுகிறது.
இதனால்,நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் வங்கி சேவைகளை பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர்.
மேலும், கடந்த காலங்களில் மினிமம் பேலன்ஸை பெரிதும் வலியுறுத்தாத வங்கிகள்,சமீப காலமாக மிகவும் தீவிரமாக கடைபிடிக்கத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்,கடந்த 5 ஆண்டுகளில் பஞ்சாப் நேஷனல் பேங்க் 1,538கோடியும் ,இந்தியன் பேங்க் 1,466 கோடியும் ,பேங்க் ஆப் பரோடா 1,251,கனரா பேங்க் 1,158கோடியும்,பேங்க் ஆப் இந்தியா 828கோடியும்,ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா640கோடியும்,சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா 587 கோடியும் , பேங்க் ஆப் மகாராஷ்டிரா 471கோடியும் ,யூனியன் பேங்க் ஆப் இந்தியா 415 கோடியும் ,யூகோ பேங்க் 66கோடியும் ,பஞ்சாப் அண்டு சிந்து பேங்க் 55கோடியும்,இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் 19.75 கோடியும் வசூலித்துள்ளனர்.
இது முந்தய ஆண்டை விட 25 சதவிகிதம் அதிகமாக அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளனர்.
பாரத ஸ்டேட் வங்கியை பொறுத்தவரை கடந்த 2020 மார்ச் முதல் வாடிக்கையாளர்களிடம் இருந்து மினிமம் பேலன்ஸ் அபராதம் வசூலிக்கப்படுவதில்லை.
மேலும்,கடந்த 2019-2020 ஆம் நிதியாண்டில் மட்டும் பாரத ஸ்டேட் வங்கி ரூபாய் 640 கோடி அபராதம் வசூலித்துள்ளனர்.