கியூஸு மற்றும் சிகோகு பகுதியில் நேற்றிரவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் உள்ள கியூஸு மற்றும் சிகோகு பகுதியில் நேற்றிரவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது. இதனை புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், ”நிலநடுக்கம் ஏற்பட்டும் சுனாமி எச்சாரிக்கை ஏதும் விடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலநடுக்கத்தில் எட்டு பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது”.
அதை தொடர்ந்து ,அந்த பகுதிகளில் வேற எந்த இடங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
மேலும்,எஹிம் பகுதியில் ஒசூ நகரில் நிலச்சரிவு ஒன்று ஏற்பட்டது. இதனால், சாலையில் பாறைகள் உருண்டோடின. வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது என தெரிய வந்துள்ளது.
இந்நிலையில்,பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் உள்ள அணுமின் நிலையங்களில் எந்த பாதிப்பும் இல்லை என்றும் வழக்கம்போல் செயல்படுகிறது என்றும் ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டிலும் ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமான ஒன்றாகத்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.