தமிழக மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் தற்போது, 200 கோடி ரூபாய் வசூலை வரிக்குவித்துள்ளது.
இயக்குநர் சிதம்பரம் இயற்றிய திரைப்படம் மஞ்சுமல் பாய்ஸ். இந்த படத்தில் நடிகர் ஸ்ரீநாத் பாசி, சௌபின் ஷாஹிர், கணபதி, பாலு வர்கீஸ், ஜீன் பால் லால ஆகியோர் நடித்துள்ளனர்.மஞ்சுமல் பாய்ஸ் படம் தற்போது தமிழ் ரசிகர்கள் மத்தியல் நல்ல வரவேற்பு பெற்றது மட்டும் இல்லாமல், சினிமா ரசிகர்கள் மட்டும் இல்லாமல் குடும்பமாக சென்று படத்தை பார்த்து மகிழ்ந்து கொண்டாடினர்.
ஏற்கனவே, மலைகளில் இளவரசி என கொண்டாடப்படும் கொடைக்கானலில் மஞ்சுமல் பாய்ஸ் படத்திற்க்கு பின்னர் இன்னும் அதிக அளவில் பார்வையாளர்களால் கொண்டாடப்பட்டுவருகிறது.’டெவில்ஸ் கிச்சன்’ என அழைக்கப்படும் குணா குகையில் 1991 ஆம் ஆண்டு சந்தான பாரதி இயக்கத்தில் குணா படத்தை எடுத்துள்ளனர்.
மேலும், இந்த படத்தில் வரும் ”மனிதன் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல, அதையும் தாண்டி புனிதமானது” என்ற இந்த வசனம் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட வசனமாகும்.அதுமட்டும் இல்லாமல் இந்த வசனம் குணா குகையில் தனது காதலி அபிராமியை நினைத்து சொல்லியிருப்பார் குணா.
தொடர்ந்து, அந்த குண குகையில் நிகழ்ந்த உண்மை நிகழ்வை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது தான் மஞ்சுமல் பாய்ஸ் படம். இந்த படம் தொடக்கத்தில் இருந்தே திரையரங்கு முழுவதும் ஹவுஸ் ஃபுல் ஆகவும் வசூலில் பெரிய சாதனை படைத்து வந்துள்ளது.மலையாள திரையுலகில் இந்த படம் அதிக வசூல் செய்த படமாக திகழ்கிறது.
மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம், சுமார் 200கோடி ரூபாய் வசூலை வாரிக்குவித்துள்ளது. அதற்கு முன்னதாக
2016 ஆம் ஆண்டு வெளியான மோகன்லாலின் புலிமுருகன் திரைப்படம் ரூ 139 கோடியயும்,அதன் பின் ஜூட் அந்தனி ஜோசப் நடிப்பில் வெளிவந்த ‘2018’ திரைப்படம் ரூ 175 கோடியையும் முறியடித்துள்ளது மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம்.