மதுரையின் அடையாளமும்மான,உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது.
உலக புகழ் பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா 12 நாட்கள் நடக்கும், இத்திருவிழாவில் கலந்துக் கொள்ள ஏராளமான பக்தர்கள் உலகெங்கிலும் இருந்து வந்து சாமி தரிசனம் பெறுவார்கள். இந்த நிகழ்வால் மதுரையே சுமார் இரண்டு வாரங்களாக பிரம்மாண்டமாக கலக்கட்டும்.
தொடர்ந்து, கோயில் கொடிமரம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகள் வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
காலை 10.30 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர்-மீனாட்சி ஆகியோர் சுவாமி சன்னதியின் முன் உள்ள கொடிமரம் முன்பு ஏழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பர்.
இதையடுத்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் விழா வரும் 23ம் தேதி அதிகாலை நடைபெறவுள்ளது.
சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு அப்பகுதியில் கலக்கட்டும். இந்த நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் திரளுவார்கள்.
இந்த நிகழ்வில் பாரம்பரிய முறைப்படி ஆட்டு தோலால் செய்யப்பட்ட பைகளில் தண்ணீர் நிரப்பி அதனை கள்ளழகர் மீது பீச்சி அடிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
கடந்த சில ஆண்டுகளாக இந்த நிகழ்வில் அதிக உயரழுத்த மோட்டார் மூலம் தண்ணீரை கள்ளழகர் மீது பீய்ச்சி அடித்து வந்த நிலையில், இனி மோட்டார் மூலம் தண்ணீர் பீச்சி அடிக்க கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது .
ஆட்டு தோலால் செய்யப்பட்ட பைகளில் மட்டும் தண்ணீர் நிரப்பி கள்ளழகர் மீது பீச்சி அடிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.