வேட்புமனுக்களை திரும்ப பெற இன்றே கடைசிநாள் என தேர்தல் ஆணையம் முன்னதாகவே அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் 2024 இன்னும் சில நாட்களில் வர இருக்கும் நிலையில் , தற்போது அனைத்து கட்சிகளும் தங்களது வேட்புமனு தாக்கல் மற்றும் பரப்புரை என்று தேர்தலை நோக்கி விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டு இருக்கின்றனர்.
மேலும், 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடக்கும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தல் (ஏப்ரல் 19) ஆம் தேதி நடத்தப்படும் என அறிவித்துள்ளது.
இதனையொட்டி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கடந்த மார்ச் 20 முதல் 27 தேதி வரை தங்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், தமிழகம் முழுவதும் 1,749 வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
அதில் தற்போது, 1,085 மனுக்களை மட்டும் தேர்தல் ஆணையம் ஏற்றுள்ளது. மீதம் உள்ள 664 மனுக்கள் நிராகரித்துள்ளது தேர்தல் ஆணையம். தொடர்ந்து கடந்த 28 ஆம் தேதியில் வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது.
மேலும், மனுவை வாபஸ் பெற மார்ச் 30 கடைசி நாள் என முன்னதாகவே அறிவித்துள்ள நிலையில், மனுவை திரும்ப பெற இன்றே கடைசிநாள் என தேர்தல் ஆணைய தலைமை அறிவித்துள்ளது.