சென்னை பெரம்பூரில் தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ப நபர்களால் வெட்டி கொல்லப்பட்ட நிலையில்,திமுக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங்.இவர் சென்னை பெரம்பூரில் அவரது புதியதாக கட்டப்பட்ட வீட்டின் முன்பாக நேற்று இரவு 7:30 மணியளவில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது, மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக வெட்டி தப்பி ஒட்டியுள்ளனர்.
இதனையடுத்து,படுகாயம் அடைந்த ஆன்ட்ராங்கை அவரது குடும்பத்தினர் மீட்டு கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிக்சை பலனின்றி பரிதாபமாக நேற்று உயிரிழந்தார்.
இந்நிலையில்,இந்தச் சம்பவம் குறித்து முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவரது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்று பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில்,”ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூர் பகுதியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தியை கேட்டதும் நான் மிகுந்த அதிர்ச்சியும் துயருமுற்றேன்.
ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ளவர் படுகொலை செய்யப்படுகிறார்.
எனில், இதற்கு மேல் இந்த திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கை என்னவென்று சொல்லி விமர்சிப்பது? இப்படி கொலை செய்வதற்கான தைரியம் குற்றவாளிகளுக்கு எப்படி வருகிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அதை தொடர்ந்து,காவல்துறை, அரசு, சட்டம் என எதன் மீதும் அச்சமற்ற நிலையே இப்படி தொடர்ச்சியாக குற்றங்கள் நடைபெறும் அளவிற்கு அவல நிலைக்கு சட்டம் ஒழுங்கைத் தள்ளிய முதல்வருக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என அதிமுக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.