கேரளாவின் வயநாடு பகுதியில் நேற்று இரவு மிகக் கனமழை பெய்துள்ளதால் அந்த பகுதியில் இன்று அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் கடந்த சில வாரங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால்,அங்கு கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
இந்த சூழ்நிலையில், கேரளாவின் வயநாடு பகுதியில் நேற்று இரவு மிகக் கனமழை பெய்துள்ளதால் அந்த பகுதியில் இன்று அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், சூரல்மலை பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
அதை தொடர்ந்து, 4.30 மணிக்கு மற்றொரு நிலச்சரிவுஏற்பட்டுள்ளது. இவ்வாறு அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகளால் வைத்திரி,வெள்ளேரிமலை, மேப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் பயங்கர பாதிப்பு ஏற்பட்டது.
மேலும்,அந்த பகுதி அட்டமலையில் இருந்து முண்டகை பகுதிக்கு செல்ல ஒரே ஒரு பாலம் மட்டுமே இருந்த நிலையில்,அந்த பலமும் தற்போது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது.
இதனால், முண்டகை பகுதியில் வசித்து வந்த 500 வீடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தற்போது எந்த வசதியும் இல்லாமல் தனித்தீவு போல் சிக்கி மாற்றியுள்ளனர்.
இந்த நிலையில்,பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு படையினர் தீவிரம் கட்டிவருகின்றனர்.
முண்டகை பகுதியில் சிக்கிய மக்களை ஹெலிகாப்டர் மூலமாக மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த விபத்தில் சிக்கி இதுவரை 36 பேர் உயிழந்துள்ளனர்.
இந்த சூழலில் விபத்தில் சிக்கிய பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.இதனால்,பலி எண்ணிக்கை உயரலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.