நெல்லை மாநகராட்சியின் புதிய மேயராக கிட்டு (எ ) ராமகிருஷ்ணன் மேயர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நெல்லை மாநகராட்சி மேயராக பதவி வகித்த பி.எம்.சரவணன் என்பவருக்கும் அந்த பகுதி கவுண்சிலருக்கும் கடந்த சில மாதங்களாக கடும் மோதல்கள் ஏற்பட்டிருந்தது.
இந்த சூழலில் மேயர் பி.எம்.சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்ய்துள்ளார்.
அதை தொடர்ந்து,நெல்லை மாவட்ட மேயர் பதவிக்காக ஆகஸ்ட் 5 ஆம் தேதியில் மறைமுக தேர்தல் நடைபெறும் என மாநகராட்சி ஆணையர் சுகபுத்ரா அறிவித்திருந்தார்.
இந்த நிலையில்,அமைச்சர் தங்கம் தென்னரசு,கே.என்.நேரு அவர்களின் தலைமையில் மேயர் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான ஆலோசனை பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
அந்த கூட்டத்தின் போது கிட்டு (எ ) ராமகிருஷ்ணன் மேயர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில்,முன்னதாக அறிவித்திருந்த படி இன்று மறைமுக தேர்தல் நடைபெற்றது.அந்த தேர்தலில் 30 வாக்குகள் பெற்று கிட்டு (எ) ராமகிருஷ்ணன் அமோக வெற்றிபெற்றார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட பவுல்ராஜ் 23 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.இதை தொடர்ந்து,கிட்டு (எ) ராமகிருஷ்ணன் நெல்லை மாநகராட்சியின் புதிய மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.