கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்தில் கேரளாவின் 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் கலர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், மாநிலத்தின் உள்ள பல்வேறு மாவட்டங்களில் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையில் பலத்த கனமழை பெய்து வருகின்றது.
ஏற்கனவே, கேராவின் வயநாடு பகுதியில் அதீத கனமழையால் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலச்சரிவில் இதுவரை 282 பேர் உயிரிழந்துள்ள நிலையில்,100 க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தற்போது 3 வது நாளாக நடைபெற்று வருகின்றனர்.
இந்த மீட்பு பணியில் ராணுவம்,காவல்துறையினர் மற்றும் தேசிய பேரிடம் மீட்பு குழு ஆகியோர் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த சூழலில் உயிரிழப்பு எண்ணிகை மேலும் உயரும் அபாயம் உள்ளது என அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.
கேரளாவில் இன்று மழைப்பொழிவு சற்று குறைந்துள்ளது.இந்த நிலையில்,கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்தில் கேரளாவின் 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் கலர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், வயநாடு, காசர் கோடு ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அதை தொடர்ந்து,நாளை கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆகஸ்ட் 5 ஆம் தேதிவரை கேரளாவில் பரவலான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளனர்.