தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் இன்று முதல் தொடங்குகிறது.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் இன்று முதல் தொடங்குகிறது.இந்நிலையில் மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் காணப்படும்.
அதை தொடர்ந்து தமிழகத்தின் வட உள் மாவட்டங்களில் இயல்பை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும், இந்த வெப்பத்திற்கு ஆறுதலாக மே 7 ஆம் தேதிக்கு பின்னர் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கோடை மழை பெய்யக்கூடும் எனவும்,சென்னையை பொறுத்தவரை மழைக்கு வாய்ப்பே கிடையாது எனவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ”தமிழகத்தில் கத்தரி வெயில் இன்று முதல் தொடங்குகிறது எனவும், கத்திரி வெயில் வருகின்ற 28 ஆம் தேதி வரை அதாவது, மொத்தமாக 25 நாட்கள் கத்தரி வெயில் சுட்டெரிக்கும் எனவும் மக்கள் தேவையின்றி வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும்” எனவும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.