கர்நாடக மாநிலம் ஷிவ்மோகா நாடாளுமன்றத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் பாஜகவைச் சேர்ந்த முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பாவை பாஜக மேலிடம் நீக்கியதாக உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் ஷிவ்மோகா நாடாளுமன்ற தொகுதியில் முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா போட்டியிட போவதாக இருந்து வந்த நிலையில், தற்போது முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்தியாவுக்கு பாஜக மேலிடம் சீட் வழங்கி உள்ளது.
இதனால், அப்பகுதியில் தனக்கு போட்டியிடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்புடன் காத்திருந்த முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா ஏமாற்றம் அடைந்துள்ளார்.
அதை தொடர்ந்து,பாஜக கட்சியின் கட்டுப்பாட்டை மீறி ஷிவ்மோகா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
இதனால் பாஜக மேலிடம் முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்நிலையில், அதில் ”முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பாவை அவர் இருந்த அனைத்து பொறுப்பில் இருந்தும் அவரை 6 ஆண்டுகள் நீக்கிவிட்டதாக பாஜக மேலிடம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது. என்ற தகவல் தற்போது வெளியாகிவருகிறது”.