5ஜி, AI தொழில் நுட்பங்களில் முதலீடு செய்துள்ளதன் காரணமாக ஜியோ நிறுவனம் தனது அனைத்து சேவைகளுக்க்கான கட்டணங்களை அதிகரித்துள்ளது.
இந்தியாவின் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது புதிய செயலியான ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம், தனது புதிய மொபைல் செயலியான ’ஜியோ ஃபைனான்ஸ் ஆப்’ (Jio Finance App)-ன் பீட்டா வெர்ஷனை வெளியிட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து,இரண்டரை ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தற்போது செல்போன் சேவைக்கட்டணத்தை உயர்த்த உள்ளதாக தகவல் உள்ளது.
இந்நிலையில்,5ஜி, AI தொழில் நுட்பங்களில் முதலீடு செய்துள்ளதன் மூலம் இத்துறையில் புதுமைகளையும், வளர்ச்சியையும் நோக்கி பயணிப்பதாக ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் தலைவர் ஆகாஷ் அம்பானி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதனால்,ஜியோ நிறுவனம் தனது அனைத்து சேவைகளுக்க்கான கட்டணங்களை அதிகரித்துள்ளது.
இந்நிலையில்,இந்த கட்டண உயர்வை வரும் ஜூலை மாதம் 3ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ளனர்.
அதன்படி, ஜியோவின் குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணம் 15 ரூபாயில் இருந்து 19 ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது.
தொடர்ந்து,75 GB போஸ்ட்பெய்ட் திட்டத்தின் கட்டணம் 399 ரூபாய்யாக இருந்ததை இனி 449 ரூபாயாக உயர்த்தியுள்ளனர்.
அதுபோல், 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட 666 ரூபாய் அன்லிமிடெட் திட்டத்தின் கட்டணம் 20 சதவிகிதம் அதிகரித்து 799 ரூபாய்க்கும் தொடர்ந்து,ஆண்டு ரீசார்ஜ் திட்டங்களுக்காக கட்டணத்தை 20 முதல் 21 சதவிகிதம் அதிகரிக்கப்படுகிறது.
இதன்படி, 1559 ரூபாய் கட்டணம் இனி 1899 ரூபாயாகவும், 2,999 ரூபாய் கட்டணம் 3,599 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
மேலும், இனி அன்லிமிடெட் 5ஜி டேட்டா அனைத்து சேவைகளிலும் கிடைக்கும் என்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவர் ஆகாஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.