அஸ்வினி :திருமணப் பேச்சுகள் இந்த சமயம் எடுத்தல், நினைத்தது வெற்றிகரமாக முடியும்.
பரணி: புதிய தொழில் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வீர்கள்.
கார்த்திகை: தங்கள்குழந்தைகளின் கல்விக்குத் தேவையான உதவிகளைச் செய்து ,குழந்தைகளை மகிழ்ச்சி படுத்துவீர்கள்.
ரோகிணி: முதலாளிகளின் மனதைப் புரிந்து கொண்டு அவர்கள் மனம் கோணாமல் வேலை பார்த்து ,நல்ல பேர் எடுப்பிர்கள்
மிருகசீரிடம்: உடன்பிறந்தவர்களுடன் பிரச்சனையை கொண்டு அதை சட்ட ரீதியாகச் சந்திப்பீர்கள்.
திருவாதிரை: எதிர்பாராமல் நேரத்தில் பணம் கிடைக்கும் அந்த பணத்தை நிலத்தில் போடுவீர்கள்.
புனர்பூசம்: ஏழை எழிய மாணவர்களின் கல்விக்கு பணம் கொடுத்து உதவி செய்வீர்கள்.
பூசம்: நீங்கள் நீண்ட நாள் வேலை பார்க்கும் இடங்களில் உள்ள பிரச்சனையில் தங்கள் மேல் உள்ள நியாயத்தை மேலதிகாரிகளிடம் எடுத்து வைப்பீர்கள்.
ஆயில்யம்: புதிய தொழில் தொடங்க லைசென்சைப் பெறுவீர்கள்
மகம்: வேலை பார்க்கும் இடத்தில் விட்டுக் கொடுத்து நீங்கள் நினைத்த காரியத்தை சாதிப்பீர்கள்.
பூரம்: வியூக வர்த்தகத்தில் எதிர்பாராத லாபத்தை அடைவீர்கள்.
உத்திரம்: தங்களின் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க குடும்பத்தில் உள்ளவர்களிடம் மனம் விட்டுப் பேசுவீர்கள்.
அஸ்தம்: கண்மூடித்தனமாக யாரையும் நம்ப வேண்டாம்.அடுத்தவரின் பேச்சை அளவோடு நம்புங்கள்.
சித்திரை: தொழிலுக்குத் தேவையான வங்கி லோன் சாங்ஷன் ஆகும்.
சுவாதி: தொழிலின் முன்னேற்றத்திற்கு உள்ள முட்டுக்கட்டைகளை முடிவுக்கு கொண்டு வருவீர்கள்.
விசாகம்: எதிர்க்களத்திற்கு தேவையான வங்கி சேமிப்பை உயர்த்துவீர்கள்.
அனுஷம்: உறவுகளுக்குள் இருந் பிரச்சனைகளை சுமுகமான முறையில் தீர்த்து வைப்பீர்கள்.
கேட்டை: தங்கள் தொழிலில் புதிய ஆர்டர்களைப் பெறுவதற்காக முயற்சி எடுப்பீர்கள்.
மூலம்: அயராது பாடுபட்டு குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.இப்போ பாடுபட்டாலும் அதிர்க்களத்தில் நலமாக இருப்பீர்கள்.
பூராடம்: அனைத்து மக்களின் ஒத்துழைப்பால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்
உத்திராடம்: தங்கள் தாயார் கேட்டதயும் அவர்களுக்கு தேவையானதயும் வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சிப்படுத்துவீர்கள்.
திருவோணம்: விவசாயத் தொழிலில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள்.
அவிட்டம்: அரசு ஊழியர்கள் வேலை அலட்சியத்தால் அவஸ்தைப்படுத்துவார்கள்.
சதயம்: ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது.
பூரட்டாதி: தங்களுக்கு விட்டுக்கொடுக்காத மனநிலையால் காதல் முறிவு ஏற்படும்.
உத்திரட்டாதி: மன நிம்மதிக்காக உல்லாசப் பயணம் மேற்கொள்வீர்கள்.
ரேவதி: சொத்துப் பிரச்சனைகாரணமாக உறவுகளில் விரிசல் உண்டாகும்.