3-வது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு, பிரதமர் மோடி செல்லும் முதலாவது வெளிநாட்டு பயணம் மேல்கொள்கிறார்.
அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா, ஜப்பான் ஆகிய முன்னேறிய நாடுகள், இணைந்து ஜி-7 என்ற அமைப்பாக உருவெடுத்து செயல்படுகின்றனர்.
இந்நிலையில் ஆண்டுதோறும் இந்த அமைப்பின் மாநாடு நடப்பது வழக்கமான ஒன்று.
இந்த மாநாட்டில் தலைமை பொறுப்பு வகிக்கும் நாடு, பிற நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்களையும் மாநாட்டுக்கு வழக்கமாக அழைக்கப்படுவார்கள்.
இந்த ஆண்டு தலைமை பொறுப்பை இத்தாலி ஏற்று மாநாட்டை நடத்துகின்றது.
இந்நிலையில், தலைமை பொறுப்பை ஏற்று நடத்தும் இத்தாலி மாநாட்டிற்கு இந்தியா உள்பட 12 வளரும் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
அந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி இன்று இத்தாலி செல்கிறார்.இத்தாலியில் அபுலியா பிராந்தியத்தில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை மாநாடு நடை பெறுகிறது.
இந்நிலையில், 3-வது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு, பிரதமர் மோடி செல்லும் முதலாவது வெளிநாட்டு பயணம் இதுவே ஆகும்.
அதை தொடர்ந்து,இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோபைடன், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ,பிரதமர் மோடி உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷிய ஆக்கிரமிப்பு பற்றிய ஒரு அமர்வில் பங்கேற்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மாநாட்டில் ரஷியா-உக்ரைன் போர், இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் ஆகியவை பற்றியும், இதன் மூலம் உலக நாடுகளில் ஏற்படும் தாக்கம் குறித்தும் விவாதிக்கப்படுகிறது.
தொடர்ந்து,மாநாட்டுக்கு இடையே, இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி உள்ளிட்ட தலைவர்களுடன் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தியதுடன் 14-ந் தேதி இரவு இந்தியா திரும்புகிறார்.
குறிப்பாக, பிரதமருடன் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், வெளியுறவு செயலாளர் வினய் குவாத்ரா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டபிரதிநிதிகள் குழுவும் செல்கிறது.
ஆனால்,இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.