எம்.எல்.ஏ சி.வேலாயுதம் மணிமண்டப திறப்பு விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு மண்டபத்தை திறந்து வைத்து சிறப்பித்துள்ளார்.
கடந்த 1996 ஆம் ஆண்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு தென்னிந்தியாவின் முதல் பாஜக எம்.எல்.ஏ வாக பதவி வகித்தவர் சி.வேலாயுதம்.
தமிழ்நாட்டில் முதல் முதலாக பாரதிய ஜனதா கட்சி சார்பில் வெற்றி பெற்ற முதல் வேட்பாளர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர்.
இவர், கடந்த மே மாதம் 8 ஆம் தேதி அன்று உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில்,வேலாயுதத்தின் சொந்த ஊரான நாகர்கோவில் அருகே உள்ள கருப்புக்கோடு என்ற பகுதியில் இவருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டு வந்தது.
இந்த மண்டபத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.அதில்,பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு மண்டபத்தை திறந்து வைத்து விழாவை சிறப்பித்துள்ளார்.
அதை தொடர்ந்து,செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை,“நாட்டு மக்களுக்கு மிக சிறப்பான பட்ஜெட்டை தற்போது பாஜக ஆட்சியில் அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால்,நடப்பு பட்ஜெட் அடுத்த 5 ஆண்டுக்கான சிறப்பான ஆட்சியை உணர்த்தும் வகையில் உள்ளது” என தெரிவித்துள்ளார்.