சர்வதேச பூனைகள் தினம் உலகெங்கும் கொட்டப்பட்டு வருகிறது.
பூனைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நாள் பூனைகளின் தேவைகள் மற்றும் விருப்பங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்க்காக அனுசரிக்கப்படுகிறது.
பூனை உரிமையாளர்கள் தங்கள் செல்லப்பிராணிகளுடன் தங்கள் பிணைப்பை மேலும் வலுப்படுத்தவும் இந்த தினம் ஊக்குவிக்கப்பட்டுகிறது.
நமது வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுள் பூனைகளும் ஒன்று.
வீட்டை பாதுக்காப்பது பூனையின் வேலை இல்லை என்றாலும் கூட பலரது குடும்பங்களில் வீட்டின் ஒருவராக செல்லப்பிராணியாகவே வளர்க்கப்படுகிறது.
பூனைகளை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் :
1.உலகம் முழுவதும் 40 வகையான பூனை இனங்கள் உள்ளனர்.
2.பூனைகள் 100க்கும் மேற்பட்ட வித்தியாசமான சத்தங்களை எழுப்பக்கூடிய தன்மை உடையது.
3.பூனைகள் கடல் நீரை கூட குடிக்கும் திறன் கொண்டது.
4.உலகளவில் செல்லப்பிராணிகளாக வளர்க்க கூடிய விலங்குகளில் பூனையும் முக்கியத்துவம் வாய்ந்தது.
5.பூனையின் சிறுநீர் இருட்டில் கூட ஒளிரும் தன்மை கொண்டது.
6.இரவில் கூட நன்றாக பார்க்கும் திறன் கொண்டுள்ளது பூனை.
7.பூனை மிகவும் சுத்தமான விலங்கு,ஏனென்றால் தனது உடலை முழுவதும் தானாகவே நக்கி சுத்தம் செய்யும் தன்மை கொண்டது.இதற்காக அதிகமான நேரங்களையும் செலவிடும்.
8.ஒரு பூனை தனது வாழ்நாட்களில் சுமார் 150 குட்டிகளை ஈன்றெடுக்கும் வலிமை கொண்டது.
9.பூனைகள் தனது காதுகளை 180டிகிரி தனித்தனியாக அசைக்கக்கூடிய திறன் கொண்டது.
10.மனிதர்களுக்கு எப்படி கைரேகைகள் இருக்கிறதோ,அதை போலவே பூனைகளுக்கு மூக்கில் ரேகைகள் உள்ளது.
11.ஒரு மனிதன் பார்க்க தேவைப்படும் 6 பங்கு ஒளிகளில்,1 பங்கு ஒளியிலேயே பார்க்கக்கூடிய திறன் கொண்டது.
12.பூனைகள் தன் உள்ளங்கால்கள் மூலமாக தனது வியர்வையை வெளியேற்றும்.
13.32 மாடியில் இருந்து கீழே விழுந்தாலும் உயிர் பிழைக்கும் சக்தி கொண்டது பூனை.
14.ஒரு பூனை தனது உடல் நீளத்தை விட 6 மடங்கு நீளம் தாண்டும் திறன் கொண்டது.
15.புனைகளில் மோப்பசக்தி மனிதர்களை விட 14 மடங்குகள் அதிகம்.
இவ்வளவு சக்திகள் நிறைந்த பூனைகளுக்கு இந்த நாள் மிகவும் முக்கியமான நாளாக பார்க்கப்படுகிறது எனவே அவைகளுக்கு பிடித்த உணவுகளை விருந்தாக கொடுத்து, இந்த நாளை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்.