ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஜிம்பாப்வே அணியுடன் 4 வது ஆட்டத்தில் இன்று இறங்கி இந்திய அணி பந்துவீசிசை தேர்வுசெய்துள்ளது.
5 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் அணிதொடர் ஜிம்பாப்வேயில் நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி விளையாடி வருகிறது.
இந்த போட்டியின் முதலாவது ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி 13 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதை அடுத்த 2 ஆட்டத்தில் 100 ரன்கள் வித்தியாசத்திலும்,மூன்றாவது ஆட்டத்தில் 23 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்த சூழலில் இந்திய அணி தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்துவருகிறது.
அதை தொடர்ந்து, இந்தியா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய இரு அணிகளுக்கும் இடையிலான 4-வது ஆட்டம் ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடைபெற்றுவருகிறது.
இந்த ஆட்டத்திற்க்கான தொடக்கத்தில் டாஸ் சுண்டப்பட்டது. அதில் இந்திய அணியின் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு தேர்வு செய்துள்ளதால் ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்துள்ளது.