சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை சர்வதேச நிலவத்துக்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் எண்ணெய் நிறுவனங்களே விலையை தீர்மானிக்க போகின்றனர்.
சர்வதேச சந்தையின் நிலவரத்துக்கு ஏற்ப டீசல் மற்றும் பெட்ரோலின் விலையை நிர்ணயித்து கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளனர்.
அதை தொடர்ந்து,சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை சர்வதேச நிலவரத்துக்கு ஏற்றவாறு ஒவ்வொரு மாதமும் எண்ணெய் நிறுவனங்களே தீர்மானிக்க போகின்றனர்.
இந்த நிலையில்,எண்ணைய் நிறுவனங்கள் தற்போது அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது.
அந்த அறிவிப்பில் ”19 கிலோ எடையுடைய வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.7.50 உயர்ந்து ரூ.1,817-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து 4 மாதங்களாக வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைந்து வந்த நிலையில், இன்று விலை உயர்ந்துள்ளது.
மேலும்,வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த ஒரு மாற்றமின்றி 14 கிலோ எடையுடைய சிலிண்டரின் விலை ரூ.818.50 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றனர்”.