செந்தில் பாலாஜியின் வழக்கில் அமலாக்கத்துறை மனுவை ஏற்ற நீதிமன்றம் இந்த வழக்கை புதன்கிழமை மாற்றி வைத்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.
இவர், அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் போன்ற பணி நியமனத்தில் முறைகேடு செய்ததாக எழுந்த வழக்கில்,கடந்த ஆண்டு ஜூன் 13 ஆம் தேதி அன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை கைது செய்தனர்.
இது தொடர்பான, ஜாமீன் வழக்கு கடந்த திங்கள் கிழமை சுப்ரீம் கோர்ட்டில் விசரணைக்கு வந்தது.
அப்போது, செந்தில் பாலாஜி சார்பில் வாதிட்ட வழக்கறிஞர்,”உடல்நிலை பாதித்த நிலையில் செந்தில்பாலாஜி தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்கும் அமலாக்கத் துறை என்ன தான் விசாரிக்கிறார்கள், எப்போது தான் விசாரிப்பார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும்,செந்தில்பாலாஜியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு இந்த வழக்கில் இருந்து விடுவித்து, ஜாமீன் வழங்க வேண்டும்” என வாதத்தை முன் வைத்தார்.
அதை தொடர்ந்து, அமலாக்கத்துறை சார்பில்,இந்த வழக்கை வேறு தினங்களுக்கு மாற்றி வைக்குமாறு கோரிக்கை எழுந்தது.மனுவை ஏற்ற நீதிமன்றம் இந்த வழக்கை புதன்கிழமை (24/7/24) மாற்றி வைத்து உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில்,செந்தில் பாலாஜியின் சட்டவிரோத பண பரிமாற்றம் செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.