‘‘அருணாச்சல பிரதேசம் எப்போதும் இந்தியாவின் அங்கம் தான்” என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
அருணாச்சல பிரதேசத்தில் உள்ள அனைத்து ஊர்,மலைகளுக்கு சீனமொழிகளில் பெயர்சீன அரசு சூட்டியுள்ளது.இது பற்றிய நான்காவது பட்டியலை சீனா வெளியிட்டுள்ளதால் மீண்டும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.
இந்நிலையில், ”அருணாச்சல பிரதேசம் எப்போதும் இந்தியாவின் அங்கம் தான்” என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இதை பற்றி அவர் கூறுகையில்,“உங்கள் வீட்டிற்கு நான் பெயர் சூட்டினால், அது என்னுடையதாகிவிடுமா? பெயரை மாற்றுவதால் எந்த மாற்றமும் நிகழாது. எல்லை கட்டுப்பாடு கோடு அருகே ராணுவம் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் உள்ளது” என தெரிவித்துள்ளார்.இதைத்தொடர்ந்து, சீனாவுக்கு தக்கபதிலடி கொடுக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்க்கே தெரிவித்துள்ளார்.
மேலும், இந்திய பகுதிகளை ஆக்கிரமிக்கும் சீனாவின் செயலுக்கு, மோடி அரசின் பேச்சுவார்த்தையால் தீர்வு காண முடியவில்லை என்றும் கார்கே குற்றம்சாட்டி விமரிசித்துள்ளார்.