நாளை தொடங்குகிறது ராசிகளின் மனதை கொள்ளை கொண்ட ஐபிஎல் 2024 பெரு விழா .
சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நாளை ஐபிஎல் 2024 போட்டி தொடங்க உள்ளது. ஐபிஎல் போட்டியை வரவேற்கும் விதமாக, போட்டி தொடங்குவதற்கு முன்பு தொடக்க விழா நடத்தப்பட உள்ளது.
இந்த விழாவில், ஏ.ஆர். ரகுமான், அக்ஷய் குமார், சோனு நிகம், டைகர் செரோஃப் ஆகியோர் பங்கேற்று போட்டியை இன்னும் சிறப்பிக்க உள்ளனர்.
மேலும், நாளை நடைபெற உள்ள போட்டியில் முதலில் களம் இறங்க உள்ள அந்த இரண்டு அணிகளுக்கும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளமாக உள்ளனர். அந்த வகையில் முதலில் போட்டியில் களம் இறங்கும் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இடையில் தான் பலப்பரீட்சை நடக்க இருக்கிறது.
அதை தொடர்ந்து, போட்டிக்காக இரு அணிகளும் பயிற்சியில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த போட்டி ஐபிஎல் 2024-ல் தொடக்கப்போட்டி என்பதால் இரு அணிகளும் தங்களது ரசிகர்களை உற்சாகப்படுத்தி,தாங்கள் வெற்றி பெறுவதற்காக தங்களது முழு திறமையையும் வெளிப்படுத்த உள்ளனர்.
அதுமட்டுமின்றி, போட்டிக்கான டிக்கெட்கள் முழுவதும் விற்பனையானதால் சேப்பாக்கம் மைதானம் ரசிகர்களால் நிரம்பி வழியும் என எதிர்பார்க்கப்படுகிறது.