கடந்த ஏப்ரல் மாதம் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது.
அதை தொடர்ந்து, நேற்று மாதத்தின் தொடக்க முதல் நாளிலே (மே 1) தங்கத்தின் விலை ஆயிரம் ரூபாய் குறைந்த நிலையில் நகை பிரியர்கள் கொண்டாட்டத்தில் இருந்து வந்தனர். ஆனால்,இன்று தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
அதன்படி,மே 2 ஆம் தேதி 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.6,715-க்கும் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு சவரன் ரூபாய் 53,720-க்கும் வீரப்பனை செய்யப்படுகிறது.
அதே போன்று, 18 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.66 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,501-க்கும், சவரனுக்கு ரூ.528 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.44,008-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதை தொடர்ந்து, வெள்ளியின் விலை ரூ 50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.87-க்கும்,ஒரு கிலோ தங்கத்தின் விலை ரூ.87,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.