சீதாராமன் தலைமையில் எட்டு மாதம் இடைவெளிக்கு பிறகு இன்று 53-வது ஜி.எஸ்.டி கூட்டம் தற்போது இன்று நடைபெற்று வருகின்றனர்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் தொடர்ந்து மூன்றாவது முறையாக அரியாசனத்தில் அமர்ந்த பாஜக இன்று முதல் முறையாக ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடத்தி வருகின்றனர்.
அதை தொடர்ந்து, இந்தியாவில் எப்போது, ஜி.எஸ்.டி வரிவிதிப்பு அமலுக்கு வந்ததோ அப்பொழுது இருந்தே ஜி.எஸ்.டி கவுன்சில் மாநாடு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, இந்த மாநாடு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று டெல்லியில் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டம் சென்ற ஆட்சியில் கடந்த அக்டோபர் மாதம் 7ஆம் தேதி 52-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடத்தப்பட்டது.
அதை தொடர்ந்து எட்டு மாதம் இடைவெளிக்கு பிறகு இன்று 5வது ஜி.எஸ்.டி கூட்டம் தற்போது இன்று நடைபெற்று வருகின்றனர்.
இந்த கூட்டத்தில் அனைத்து மாநிலங்களின் அமைச்சர்கள் மற்றும் அனைத்து அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் இந்த கூட்டத்தில் ஜி.எஸ்.டி வரி மீது உள்ள விகிதத்தில் செய்ய வேண்டிய மாற்றங்கள் பற்றி பேச உள்ளனர்.
அதுமட்டுமின்றி,ஆன்லைன் விளையாட்டு மற்றும் உரங்களின் மீதுள்ள வரிவிகிதத்தை குறைப்பதற்காக நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் இது போன்றவை குறித்து பரிந்துரைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளனர்.