இராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலத்தை கடந்து செல்லும் பொழுது, பொதுமக்கள் யாரும் காரை விட்டு இறங்கக்கூடாது.மீறி இறங்கினால் அபராதம் வீடு தேடி வரும்.
தமிழகத்தில் புனித பூமி என்றழைக்கப்படும் இராமநாதபுரத்தில் உள்ள இராமேஸ்வரம் பகுதியில் ஏராளமான சுற்றுலா தளங்கள் உள்ளது.அந்த வகையில் சுற்றுலா தளங்களில் மிக முக்கியமான தலமாக அமைந்துள்ளது பாம்பன் பாலம். இந்த பாலத்தை பார்ப்பதற்காக ஏராளமான பார்வையாளர்கள் இராமேஸ்வரம் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில்,இராமநாதபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். ”அதில்,இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் செல்லும் வழியில் பாம்பன் பாலத்தை கடந்து செல்லும் பொழுது,பொதுமக்கள் யாரும் காரை விட்டு இறங்கினால் ரூபாய்.1000 அபராதம் வீடு தேடி வரும்.என்றும் போலீசார் இல்லாத நிலையில் பாலத்தில் முதல் கட்டமாக பத்து சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணித்து வருகின்றது என கூறினார் . போலீசார் இல்லை என்று பொதுமக்கள் கார் கதவை திறந்தாலே கேமரா படம்பிடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது கடந்த (7/4/2024) அன்று நடைமுறைக்கு வந்துள்ளது”என்று தெரிவித்துள்ளார்.
எனவே, சுற்றுலா பார்வையாளர்கள் பாம்பன் பாலத்தில் விதிக்கப்பட்ட இந்த விதிமுறையை மீறினால் காவல்துறை அதிரடியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.