2022 ஆண்டுக்கான பிலிம்பேர் விருதுகளுக்கான சிறந்த படத்திற்க்கான விருதுகளை ஆர்.ஆர்.ஆர் பெற்றுள்ளனர்.
கடந்த 2022 ஆண்டுக்கான பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா கடந்த 11-ம் தேதி நடைபெற்றது.
அந்த விழாவில் எதிர்பார்த்தபடி, சிறந்த படத்திற்க்கான விருதுகளை ஆர்.ஆர்.ஆர் மற்றும் காந்தாரா படங்கள் விருதை தட்டி துக்கியுள்ளது.
இதில், ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் 7 விருதுகளும், காந்தாரா திரைப்படத்திற்கு 7 விருதுகள் மற்றும் சீதா ராமம் திரைப்படத்திற்கு 5 விருதுகளையும் குவித்துள்ளனர்.
அதை தொடர்ந்து,தெலுங்கு பிரிவுகளில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் சிறந்த இயக்குனர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட 7 பிலிம்பேர் விருதுகளையும்,ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் பெற்றுள்ளது.
மேலும்,சிறந்த கலைஞர் விருதுகளை சீதா ராமம்திரைப்படத்தில் நடித்துள்ள துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், சின்மயி, ஸ்ரீவெண்ணல சீதாராம சாஸ்திரி உள்ளிட்ட 5 கலைஞர்கள் விருதுகளை வென்றுள்ளனர்.