சென்னை குற்றப்பிரிவு போலீசார் வீந்தர் சந்திரசேகர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
பிரபல படத் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் முருங்கைக்காய் சிப்ஸ், சுட்ட கதை, நளனும் நந்தினியும் போன்ற படங்களை தயாரித்துள்ளார்.
இவர் கடந்த ஆண்டு கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதாக கூறி சென்னையை சேர்ந்த ஒரு நபரிடம் சுமார் 16 கோடி ரூபாய் வாங்கி ஏமாற்றியுள்ளார்.
இந்த நிலையில், சென்னை குற்றப்பிரிவு போலீசார் வீந்தர் சந்திரசேகர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த வழக்கில் ஒரு மாதம் சிறையில் இருந்த ரவீந்தர் நிபந்தனை ஜாமினில் வெளிவந்தார்.
இதனை அடுத்து, சட்டவிரோத பணம் பறிமாற்றத்தில் ஈடுபட்டதாக, சென்னை அசோக் நகரில் உள்ள ரவீந்தர் சந்திரசேகர் வீட்டில் இன்று காலையில் இருந்து அமலாக்கத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும்,இவருக்கு கடந்த 2022-ம் ஆண்டு பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமிக்கும் திருமணம் அனைத்து குறிப்பிடத்தக்கது.