மக்களவை தேர்தலை பற்றிய தகவல்கள் தற்போது நாடெங்கும் தீயாய் பரவிவருகிறது.தற்போது, நாடாளுமன்றத்தில் மக்களவையின் பதிவிக்கலாம் வரும் மே மாதத்துடன் முடிய உள்ள நிலையில்,வருகின்ற ஏப்ரல்,மே மாதங்களில் தேர்தலை நடத்த தேர்தல் அணையம் முடிவெடுத்துள்ளது.தேர்தலுக்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர்.
அதை தொடர்ந்து, 2024 ஆண்டுக்கான மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிக்க இருக்கும் நிலையில், நாளை பிற்பகல் மூன்று மணிக்கு தேர்தல் கால அட்டவணை வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதனை, தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் புதிதாக தேர்வு செய்யப்பட்ட தேர்தல் ஆணையர்கள் கூட்டாக தேர்தல் தேதியை அறிவிக்க போவதாக தெரிவித்துள்ளனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் தேர்தல் நடத்தை பற்றிய விதிகளும் அமலுக்கு வந்துவிடும்.
அதுமட்டுமின்றி,அரசியல் களங்களில் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் அனல்பறக்க சூடுபிடிக்க தொடங்கும்.தேர்தல் நெருங்கி வருவதால் தற்போதே கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவிக்க ஆரம்பித்துள்ளனர் .
அதில், தேசிய கட்சியான பா.ஜ.க இரண்டு கட்டமாக 267 வேட்பாளர்களையும்,காங்கிரஸ் 82 வேட்பாளர்களையும் அறிவித்துள்ளது.மேலும் மாநில கட்சிகளும் தங்களது கூட்டணி வேட்பாளர்ளின் அறிவிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. தொடர்ந்து, மேற்குவங்கத்தில் மம்தா 42 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் என அறிவித்து வேட்பாளர்களையும் அறிவித்துள்ளார். எப்பவும் உள்ளதை விட தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்கும் என மக்களால் எதிர்பாக்கப்படுகிறது.