மாநில அரசின் பட்ஜெட் அறிக்கையில் தமிழக அரசு முன்வைத்த கோரிக்கை இடம் பெறவில்லை.
மத்திய அரசு பட்ஜெட்டில் இருந்து தமிழகத்தை புறக்கணித்த மத்திய அரசுக்கு எதிராக திமுக சார்பில் வருகின்ற ஜூலை 27 ஆ ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக திமுக தலைமை ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்த நிலையில்,தமிழக அரசு சார்பில் இருந்து மத்திய பட்ஜெட் துவங்குவதற்கு முன்னதாகவே தமிழகத்தில் மெட்ரோ பணிகளுக்கு தேவையான நிதி மற்றும் பேரிடர் நிவாரண நிதி ஆகியவற்றை மத்திய அரசு வழங்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான மாநில அரசின் பட்ஜெட் அறிக்கையில் தமிழக அரசு முன்வைத்த கோரிக்கை இடம் பெறவில்லை.
பட்ஜெட்டில் தமிழக அரசை புறக்கணித்த மாநில அரசை கண்டித்து சென்னையில் கவர்னர் மாளிகை அருகே தென்சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் மயிலை பாலு, பிரபாகர ராஜா, துணை மேயர்,நிர்வாகிகள் என சும்மார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
மேலும்,ஆர்ப்பாட்டம் நடைபெறுவதால் அந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் போக்குவரத்து மாற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றனர்.
அதை தொடர்ந்து,இந்த ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடைபெற்று வருகின்றனர்.