தேனியில் அமைச்சர் உதயநிதி பரப்புரையில் கலந்துக்கொண்ட மக்களுக்கு திமுவினர் பணம் கொடுக்கும் வீடியோ தற்போது வெளியாகி சர்ச்சையாகி உள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில நாட்களில் வரவுள்ள நிலையில், தற்போது தேர்தல் பிரச்சாரங்கள் தீயாய் அனைத்து கட்சியினர் மத்தியல் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தேனியில் நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரிக்கும் வகையில் திமுக மாநில இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பங்களாமேடு பகுதியில் வாகனத்தில் இருந்தப்படியே பரப்புரை மேற்கொண்டுள்ளார்.
மேலும், இந்த பரப்புரையில் திமுக கட்சியின் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து பரப்புரை முடிந்து பெரியகுளத்திற்கு அமைச்சர் ஸ்டாலின் சென்றுள்ளார்.
அதன் பிறகு, கூட்டத்திற்கு வந்த பெண்கள் மற்றும் கலந்துக்கொண்ட அனைவருக்கும் திமுக சார்பில் தலா 200 ரூபாய் விநியோகம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது, அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. தேர்தல் நேரங்களில் இவ்வாறு பணம் விநியோகம் செய்வது தேர்தல் விதிமுறையை மீறுவதாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.