கலைஞர் கருணாநிதியின் 6 ஆம் ஆண்டு நினைவு தினம் வருகின்ற 7 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும்,திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதி கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார்.
இந்த நிலையில்,கலைஞர் கருணாநிதியின் 6 ஆம் ஆண்டு நினைவு தினம் வருகின்ற 7 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
திமுக தலைவரும்,தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கலைஞர் கருணாநிதியின் நினைவு தினத்தன்று அமைதி பேரணி நடைபெறவுள்ளது.
இந்த பேரணியில்,திமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள், கட்சியின் மூத்த தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொள்ளுமாறு திமுக தலைமை அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 7 ஆம் தேதி அன்று காலை 7 மணியளவில் ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் இருந்து இந்த பேரணி தொடங்குகிறது.
மேலும்,இந்த பேரணி மெரினா கடற்கரையின் அமைந்துள்ள அண்ணா,கலைஞர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதையை செலுத்துவதுடன் பேரணி முடிவடைகிறது.