திமுக அரசு வெளியில் இருந்து மின்சாரத்தை வாங்குவதின் காரணமாகத்தான் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
பாஜக சார்பில் வடசென்னை நாடாளுமன்ற தொகுதியில் களம் கண்ட பால் கனகராஜிற்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும்,தமிழகத்தில் மின்சார கட்டணம் உயர்வவை கண்டித்தும் கூட்டம்நடத்தப்பட்டது.
இந்த கூட்டம் திருவெற்றியூர் காலடிப்பேட்டை பகுதி தெருமுனை நடைபெற்றது.இதில் தெலுங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியுள்ளார்.
அப்போது பேசிய தமிழிசை சௌந்தரராஜன், ”நான் பாஜகவில் இணைந்து 25 ஆண்டுகள் ஆகின்றது எனவும் என்னை வழிநடத்தி செல்லும் பாஜக தொண்டர்களுக்கு நன்றி எனவும் தெரிவித்தார்.
அதை தெடர்ந்து, கட்சித் தொண்டர்களுடன் இணைந்து பணியாற்ற நான்கு வருடங்கள் ஆகிய நிலையில், தற்போது தெலுங்கானா ஆளுநர் பதவியை விட்டு வந்ததாகவும் கூறினார்.
ஏனெனில்,ஆளுநர் பதவியில் இருக்கும் போது தன்னை 20க்கும் மேற்பட்ட காவல்துறையினர் உடன் இருப்பதால் மக்களிடம் நேரடியாகவும், நெருக்கமாக இருக்க முடியாது என்பதால் தான் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு மக்களோடு மக்களாக இணைந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், நமது தமிழ் கலாச்சாரத்தின் நினைவாக பாராளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு சென்ற 40 பேர் செங்கோலை நீக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.
இந்த நிலையில், அதேபோன்று 2026 இல் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைத்து செங்கோலை சட்டமன்றத்தில் பாரத பிரதமர் முன்னிலையில் வைக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும்,தமிழகத்தில் திமுக அரசு மின்சார கட்டணத்தை மூன்றாவது முறையாக உயர்த்தி உள்ளதாகவும் மின் உற்பத்தியில் எந்த ஒரு முயற்சியும் செய்யாமல் வெளியில் இருந்து மின்சாரத்தை வாங்குவதின் காரணமாகத்தான் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி,தமிழக அரசு மின் உற்பத்தி செய்வதற்கு எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை” எனவும் குற்றம் குற்றம் சாட்டியுள்ளார்.