மத்திய அரசுக்கு எதிராக திமுக சார்பில் வருகின்ற ஜூலை 27 ஆம் தேதி கண்ட ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக திமுக தலைமை அறிக்கை அறிவித்துள்ளதுள்ளது.
மத்திய அரசு பட்ஜெட்டில் இருந்து தமிழகத்தை புறக்கணித்த மத்திய அரசுக்கு எதிராக திமுக சார்பில் வருகின்ற ஜூலை 27 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக திமுக தலைமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில்,“ஒரு இந்திய நாட்டின் நிதிநிலை அறிக்கை என்பது இந்தியத் திருநாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் உரிய பங்கினை பகிர்ந்து அளிக்க வேண்டும்.அப்படி அளித்தல் தான் நாடு முழுவதும் சமச்சீரான வளர்ச்சியை உருவாக்கிட உதவுவதுடன், நாட்டில் வாழும் அனைத்து கடைக்கோடி மனிதர்களின் வாழ்வை மேம்படுத்தும் கொள்கை பிரகடனமாகவே இருக்க கூடும்.
ஆனால், இந்த ஆண்டின் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை, ஒட்டுமொத்த இந்திய நாட்டிற்கான நிதிநிலை அறிக்கையாக தெரியவில்லை.
அதற்கு நேர்மாறாக, தங்கள் ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்க்காவும்,அதை தக்க வைத்து கொள்வதற்காகவும் சில மாநிலங்களுக்கு மட்டும் நிதியை தாராளமாக அள்ளிக்கொடுத்துள்ளது.
இந்திய நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்து வரும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மீது வன்மத்தை கக்கிடும் வகையில் இந்த ஆண்டின் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் முன்வைக்கப்பட்ட மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான நிதி, தமிழ்நாடு சந்தித்த இரண்டு தொடர் பேரிடர் இழப்புகள் ஆகியவற்றிற்கு நிதி வழங்கிடவேண்டும் என்ற கோரிக்கைகளை மத்திய அரசு முற்றிலுமாக புறக்கணித்துள்ளது.
ஒரவஞ்சமாக சில மாநிலங்களுக்கு மட்டும் பேரிடர் நிதி அள்ளி வழங்கப்பட்டுள்ள மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை மாற்றாந்தாய் போக்குடன் வஞ்சித்துள்ளது பாசிச பா.ஜ.க. மத்திய அரசு.
இதனை கண்டிக்கும் வகையில் வருகிற ஜூலை 27,சனிக்கிழமை, காலை 10.00 மணியளவில், மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. சார்பில்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்டக் கழக நிர்வாகிகள் – கழக பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில், கழக முன்னணியினர் முன்னிலையில் நடைபெறுகின்றனர்.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட,ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளைக் கழகச் செயலாளர்கள் நிர்வாகிகள், அனைத்து அமைப்புகளில் உள்ள அனைத்து மாவட்டக் கழகச் செயலாளர்கள் உரிய ஏற்பாடுகளை செய்து, தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய பாசிச பா.ஜ.க. அரசுக்கு தங்கள் கண்டனத்தை பதிவு செய்திட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அனைத்து மாவட்டங்களில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டம் குறித்த விவரத்தை மாவட்ட தலைமைக் கழகத்திற்கு உடனே தெரிவித்திட வேண்டுமெனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.