தாம்பரம் இரயில் நிலையத்தில் பறிமுதல் செய்த 4 கோடி பற்றிய வழக்கில் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் வாக்குமூலம் பேரில் மீண்டும் நயினார் நாகேந்திரனுக்கு போலீசார் சம்மன்.
கடத்த ஏப்ரல் 6 ஆம் தேதி சென்னை தாம்பரம் இரயில் நிலையத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட 4 கோடி ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும்படை பறிமுதல் செய்துள்ளனர்.அதை தொடர்ந்து, பணத்தை எடுத்து வந்த சதீஸ்,பெருமாள், நவீன் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், அந்த பணம் தேர்தலுக்காக பணம் பட்டுவாடா செய்வதற்காக கொண்டு சென்ற பணமா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் தேர்தல் பணப்பட்டுவாடாவிற்காக நயினார் நாகேந்திரனின் உதவியாளர் மணிகண்டன் எடுத்து வர சொன்னதாக தெரிவித்தனர்.
மேலும், இது குறித்து நயினார் நாகேந்திரனின் உறவினர் மற்றும் நண்பர்கள் ஆசைத்தம்பி,ஜெய்சங்கர் ஆகியோர் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்துள்ளானர்’.
இதை அடுத்து சம்பந்தப்பட்ட மூவருக்கும் போலீசார் சம்மன் அனுப்பினர். இந்நிலையில், நேற்று ஆசைத்தம்பி,ஜெய்சங்கர் மற்றும் நயினார் நாகேந்திரன்னின் உறவினர் முருகன் காவல் நிலையத்தில் ஆஜராயினர்.
அதை தொடர்ந்து,போலீசார் நயினார் நாகேந்திரன் உறவினர் முருகனிடம் நடத்திய விசாணையில் ”எனக்கு இந்த பணத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் நயினார் நாகேந்திரனின் உதவியாளர் மணிகண்டன் பணம் எடுத்து வரும் நபர்களின் பாதுகாப்பிற்காக தாம்பரம் இரயில் நிலையத்திற்கு இருவரை அனுப்புமாறு கேட்டார். இதனால், தான் நான் ஆசைத்தம்பி மற்றும் ஜெய்சங்கர் ஆகியோரை அனுப்பி வைத்தேன்” என்று தெரிவித்தார்.
மேலும், ”முருகன் சென்னையில் 4 ஓட்டல்கள் லீசுக்கு எடுத்துள்ளதாகவும், அந்த ஓட்டல்களில் வேலை பார்ப்பவர்கள்தான் அசைதம்பியும்,ஜெய்சங்கரும் என முருகன் தெரிவித்தார்”.
இந்நிலையில், போலீசார் விசாரணைக்கு பிறகு நயினார் நாகேந்திரனின் உதவியாளர் மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளனர்.ஏற்கனவே நயினார் நாகேந்திரனுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ள நிலையில்,அவர் 10 நாட்கள் கால அவகாசம் கேட்டிருந்தார்.இன்னிலையில் முருகன் அளித்த வாக்குமூலம் பேரில்,தற்போது மீண்டும் சம்மன் அனுப்ப தாம்பரம் போலீசார் முடிவு செய்துள்ளனர்.